JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

இந்து பாதுகாப்பு படையின் ரத யாத்திரை தொடக்க விழா பூஜை.தேசியத் தலைவர் கண்ணன் தலைமையில் கோ- சாலையில் நடைபெற்றது.

இந்து பாதுகாப்பு படையின் ரத யாத்திரை தொடக்க விழா பூஜை.
தேசியத் தலைவர் கண்ணன் தலைமையில் கோ- சாலையில் நடைபெற்றது.ஈரோடுஈரோடு மாவட்டம் பெரியபுலியூரில் அமைந்துள்ள இந்து பாதுகாப்பு படையின் கோ- சாலையில் பசுவதை தடுப்புச் சட்டத்தின் படி பசுக்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் இந்து பாதுகாப்பு படை சார்பாக கோமாதா ரத யாத்திரை தொடக்க விழா பூஜை தேசிய தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து திராவிட மக்கள் கட்சியின் தேசிய தலைவர் ரமேஷ்பாபு ,அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் செஞ்சி ராஜா ,இந்து ருத்ர சேனா மாநிலத் தலைவர் லட்சம் லிங்கம், இந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுரு மற்றும் இந்து பாதுகாப்பு படையைச் சார்ந்த தேசிய, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *